ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மருந்து செலவு குறைந்தது என்றும் அதனை சேமிப்பது சுலபம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஸ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், ஸ்புட்னிக்கின் மூன்று மருந்துகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருந்து தொடர்பில் பேராசிரியர் லமாவன்ச ரஸ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஏனைய மருந்துகளுடன் ரஸ்ய மருந்து ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.