கொரோனா 21 ஆவது உயிரிழப்பு பதிவானது

0

நபரொருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை கம்பஹா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட போது, குறித்த நபருக்கு கொவிட் தொற்றிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர முதல்வர் எரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.

மஹர பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இத்துடன் கொரோனாவால் 21 உயிரிழப்புகள் நடந்துள்ளன.