தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது, கொறடா பதவியில் இருந்து விலகியமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பதவியில் இருந்துள்ளேன்.
அதுமட்டுமல்லாது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமானதாக இல்லை.
அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியினை வைத்து ஸ்ரீதரன் பணம் சம்பாதிப்பதுபோல் ஒரு மாயயை உருவாக்கி வருகிறார்கள்.
ஆகவே, அவ்வாறானதொரு பதவி எனக்குத் தேவையில்லை. எனவே, குறித்த பதவியில் இருந்து வெளியேறியுள்ளேன்.
இதேவேளை, இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் இன்று உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.