கொழும்பின் பல பாகங்களில் பெருமளவு ஆயுதங்கள்! பொலிஸார் அதிரடி நடவடிக்கை

0

இலங்கையில் பாதாள உலக குழுவினரர் பெருமளவு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியஸ்தர்களை கொலை செய்தல் உட்பட பல்வேறு குற்ற செயல்கள் மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஆயுதங்கள் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலக குழுவினர் இந்த ஆயுதங்களை சில இடங்களில் மறைத்து வைத்திருப்பதாக தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஆயுதங்கள் தொடர்பில் துப்பு வழங்கினால் அதிகரிக்கப்பட்ட பணப்பரிசில் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.