அத்தியாவசிய தேவையின்றி கொழும்பிற்கு வர வேண்டாம் என கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் உங்களுக்கு முன்னால் உள்ளவரை கொரானா நோயாளியாகவே சந்தேகத்துடன் பாருங்கள்.
தேவையற்ற விடயத்தை தவிர்த்து இந்த நேரத்தில் அடிக்கடி கொழும்பு நகரத்திற்கு வர வேண்டாம்.
வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.
அனைவரும் சுகாதார பழக்கங்களை கடைபிடிப்பது கட்டாயமாகும். வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சமூக இடைவெளியை கடைபிடித்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.