கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்

0

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை http://vfsglobal.co.uk/lk என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அத்தோடு விசா விண்ணப்ப நிலையதிற்குள் நுழைவதற்கும் முன்அனுமதி அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், அவை இன்றி நிலையதிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.