கொழும்பில் அமைச்சர் ஒருவரின் செயற்பாட்டால் பெண்கள் பாடசாலைக்கு ஏற்பட்ட கதி

0

கொழும்பில் சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவர் ஓட்டிச்சென்ற வாகனம் ஒன்று பாடசாலை ஒன்றில் மோதியுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மோதுண்டமையினால் பாடசாலையின் மதில் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை குடிபோதையில் அமைச்சர் வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் மதிலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அதனை மீண்டும் கட்டிக் கொடுப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய வாகனம் கொழும்பு 7 பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.