கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

0

கொழும்பில் காணி விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நில மதிப்பீட்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது காணி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் நில மதிப்பீட்டு அட்டவணையின் 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் 141.6 வீதம் பதிவாகியிருந்த நிலையில் அதன் வருடாந்த அதிகரிப்பு நூற்றுக்கு 7.1 வீதமாகும்.

இதற்கிடையில், அரையாண்டு அடிப்படையில் நில மதிப்பீட்டுக் குறியீட்டின் வளர்ச்சி 2.0 சதவீதமாகும்.

கடந்த கால பகுதியுடன் ஒப்பிடும் போது நில மதிப்பீட்டு குறியீட்டில் ஆண்டு மற்றும் அரையாண்டு வளர்ச்சி, சமீபத்திய காலங்களில் குறைந்து வரும் போக்கைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.