கொழும்பில் வாராந்தம் பெருந்தொகை தங்கம் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்த குழுவினரால் மேற்கொண்ட தங்க விற்பனை தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
குறித்த குழுவினால் வாரத்திற்கு 300 முதல் 500 கிலோ கிராம் தங்கம் கொழும்பு ஹெட்டிவீதியில் உள்ள தங்க நகை கடைக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாதாரண முறையில் அந்தளவு தங்க தொகை குறித்த நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடகு வைக்கும் தங்க பொருட்களை மீட்டு தருவதாக கூறி இந்த குழுவினர் மோசடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடகு வைக்கப்படும் தங்க நகைகளை திருடி, குறைந்த விலையில் தங்க நகை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.