கொழும்பில் நேற்று மாத்திரம் 226 கொரோனா தொற்றாளர்கள்!

0

இலங்கையில் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 532 பேரில் 226 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவல பகுதியில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 35 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 14 பேரும், யாழ் மாவட்டத்தில் 08 பேரும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.