கடந்த 6ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் இரண்டாயிரத்து 884 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜேமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர்களில் ஐந்து பேர் மாத்திரமே கொழும்பு நகரை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் இதுகுறித்து அச்சப்படாமல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.