கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்!

0

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.