கொழும்பு உட்பட இடர் வலையங்களில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு!

0

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை.