கொழும்பு உட்பட மேலும் 4 மாவட்டங்களின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

0

நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் உள்ள 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பகுதியில் உள்ள நாம்பமுனுவ கொராக்கப்பிட்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை காலிமாவட்டத்தின் அம்பலாங்கொட பகுதியில் உள்ள கொடஹேன தல்கஸ்கொட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தெஹியத்தகண்டிய மற்றும் கதிராபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அத்துடன் இரத்தினபுரி மாவட்டம் கலவான பிரதேசத்தில் உள்ள ஹப்புகொட ஆகிய பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.