கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் கொரோனா நோயாளி

0

கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலையத்தின் 35 மாடியில் செயற்பட்ட நிறுவனம் ஒன்றின் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிறுவனத்தின் பணிப்பாளருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களிடமும் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பணியாளருக்கே இன்றைய தினமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பணிப்பாளர் கடந்த 8ஆம் திகதி இறுதியாக அலுவலக பணிக்கு வந்துள்ளார் என நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.