கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்கள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலவ தெற்கு மற்றும் வடக்கு, கீழ் கரகஹாமுல்ல வடக்கு, மேல் கரஹாமுல்ல வடக்கு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொத்த, கெஸ்பெவ கிழக்கு, மாகந்தன மேற்கு, குந்தன, பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்புர கிராம சேவகர் பிரிவும், மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடியன மேற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, உடன் அமுலாகும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இங்குருதலுவ, பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.