கொழும்பு – செட்டியார் தெருவில் கடைகள் உடைப்பு : அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

0

கொழும்பு 11 − செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சட்டவிரோத நிர்மாணங்கள் எனக் கூறி, வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாகவும், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படுவதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக தற்போது குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.