கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையின் 2 வார்ட்கள் மற்றும் ஒரு சத்திரசிகிச்சை அறை என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர் மீண்டும் கரை திரும்பினார்.

அவரை ராகம வைத்தியசாலையில் சேர்த்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவருடன் நெருங்கிப் பழகியிருந்த சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேசயம் கடந்த மாதம் 23 ஆம் திகதிக்குப் பின்னர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் பழகியிருந்த எவராவது இருப்பின் உடனடி பி சி ஆர் பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு இராணுவத்தளபதி கேட்டுள்ளார்.

இதற்கிடையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள நெக்ஸ்ட் என்ற ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அங்கு பல தொழிற்சாலைகள் கொரோனா அச்சம் காரணமாக மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.