கொழும்பு – மத்துகம சொகுசு பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா!

0

கொழும்பு – மத்துகம சொகுசு பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி, அதன் நடத்துனர், பேருந்தின் உரிமையாளர் ஆகிய மூவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்தின் உரிமையாளர் மதுகம நவுன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நடத்துனர் மத்துகம பந்துகம பிரதேசத்தையும், சாரதி ஒவிடிகல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சுயவிருப்பில் பீ.சீ.ஆர். பரிசோதனை செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது