கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள 45 தீவிர சிகிச்சை பிரிவுகள்

0

கோவிட் நோயாளிகளின் நலனுக்காக கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளில் மேலும் 45 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை சுகாதார அதிகாரிகள் இன்று ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் சன்ன ஜெயசுமன இன்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோவிட் நோயாளிகளுக்காக முதலில் ஒதுக்கப்பட்ட அதிதீவிர சிகிச்சைப்படுக்கைகள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன.

அதேநேரம் ஏனைய முக்கியமான நோயாளிகளுக்கும் போதுமான படுக்கைகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் தற்போது கோவிட் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இன்று தொடர்ச்சியான இரண்டாவது நாளாகவும், இன்று 1000 க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.