கொழும்பு, குருநாகல், கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளது.
வளியின் திசை மாற்றம், குப்பைகள் எரிக்கப்படுகின்றமை, நகர்ப்பகுதிகளில் நாளாந்தம் அதிகளவான வாகனங்கள் உட்பிரவேசிக்கின்றமை என்பன இதற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நகரில் காலை 08 மணி வரை வளியின் தரச்சுட்டி 117 பாகையாகவும் கொழும்பு நகரில் 95 பாகையாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் வளி மாசு அதிகரித்துள்ள நிலையில், அங்கு வளியின் தரச்சுட்டி 91 பாகையாக பதிவாகியுள்ளது.