கொழும்பு – யாழ். உள்ளிட்ட 6 பேருந்துகளில் கொரோனா தொற்றாளர்கள்

0

இலங்கையில் இதுவரையில், கொரோனா தொற்றாளர்கள் பயணித்த ஆறு பேருந்துகள் இனங்காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேருந்திலும் ND 2350 மாகும்புர – காலி பேருந்திலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்தோடு, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்திலும் ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து மற்றும் NF 7515 காலி – கடவத்த பேருந்து ஆகியவற்றிலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும்போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தந்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.