கொழும்பு வெள்ளவத்தையில் மீண்டும் கோவிட் அச்சுறுத்தல்! 15 பேருக்கு தொற்று உறுதி

0

கொழும்பில், கோவிட் தொற்றினால் கெஸ்பேவ , கொம்பனித்தெரு மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி , கொழும்பு மாவட்டத்தில் மேலும் 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 94 பேர் கொழும்பு மாநகர சபை எல்லையிலும் , 223 கொழும்பு மாவட்டத்தின் பிற பகுதிகளையும் சேர்ந்தவர்கள். கெஸ்பேவயில் 51 பேரும், கொம்பனித்தெருவில் 15 பேரும், வெள்ளவத்தையில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநாகல் , கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.