இலங்கையில் இரண்டாவது கொவிட் அலையினால் கொழும்பு மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தின் தரவுகளுக்கு அமைய, நேற்றைய தினம் வரை கொழும்பு மாவட்டத்தில் 11,088 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 204 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 6690 கொவிட் தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1214 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மொத்தமாக 18,992 கொவிட் தொற்றாளர்கள், இரண்டாவது கொவிட் அலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களுக்கு அடுத்ததாக கண்டி மாவட்டமே அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 774 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.