கொவிட் சுகாதார வழிமுறைகளை தவிர்க்கும் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

0

அடலுகம பகுதி மக்கள் சுகாதார தரப்பிற்கு ஆதரவு வழங்கி தமது பிரதேசத்தை பாதுகாத்தக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவ்வாறு குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவிற்கு ஒத்துழைப்பு வழங்க தவறும் பட்சத்தில், குறித்த பகுதியிலுள்ளவர்கள் பல நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

தன்னிச்சையாக வாழும் ஒரு குழுவின் செயற்பாடுகள் காரணமாக முழு களுத்துறை மாவட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு  இடமளிக்க முடியாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.