கொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா? விசேட வைத்தியர் விளக்கம்

0

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி மூலம் எந்தவொரு பாலியல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவித்தார்.

எனவே சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாறாமல், கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கேட்டுக்கொள்கிறார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இந்த கருத்துக்களை தெரிவித்தார்.