கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிக்கை எப்போது வெளியாகும் – தகவல் வெளியானது!

0

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு, மிக ஆழமாக ஆராயவுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் ஆராயப்பட்டதன் பின்னர், குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கையளிக்கப்படும் என அவர் கூறினார்.

அதன் பின்னரே, குறித்த அறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர், சிங்கள நாளிதழொன்றுக்கு தெரிவித்துள்ளார்.