கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக டொயொடா லங்கா தனியார் நிறுவனம் 20 மில்லியன் பெறுமதியான இரண்டு பேருந்துகளை அன்பளிப்பு செய்துள்ளது.
இரண்டு பேருந்துகளும் நேற்று(புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து டொயொடா லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினர்களினால் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இலங்கை மருந்துப்பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார மற்றும் அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய ஆகியோரிடம் கொவிட் ஆராய்ச்சி மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு பேருந்துகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது.