கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதிக்கு மேலும் 32 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

0

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 769 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்ன தேரர் 05 மில்லியன் ரூபாவும், வட அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய மஹரகம தம்மசிறி தேரர் 05 மில்லியன் ரூபாவும், பிரான்சின் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பரவாஹெர சந்திரரத்ன தேரர் ஒரு மில்லியன் ரூபாவும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா சர்வதேச பௌத்த விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தவளம தம்மிக தேரர் மற்றும் சங்கைக்குரிய ஹல்விடிகல சுஜாத தேரர் ஒரு மில்லியன் ரூபாவும், கல்கிஸ்ஸை பௌத்த நிலையத்தின் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய திவியகஹ யஸஸ்ஸி தேரர் ஒரு மில்லியன் ரூபாவும் இத்தாலியின் சிரென்சி சமாதி விஹாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தொம்பதெனியே நந்தசிறி தேரர் 02லட்சம் ரூபாவும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

சீ.ஜே. விக்ரமரத்ன 05 மில்லியன் ரூபாவும், மெரைன் வன் தனியார் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவும், மரீனா பூட்ஸ் தனியார் நிறுவனம் மற்றும் இலங்கை இருதய சங்கம் தலா 05 மில்லியன் ரூபாவும், வீதிப் போக்குவரத்து அதிகார சபை 05லட்சம் ரூபாவும், ஏ.அமரசிங்க ஒரு லட்சம் ரூபாவும், பீ.டீ. தர்மவர்தன ஐம்பதாயிரம் ரூபாவும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.