கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்ப நிதியத்தின் வைப்பு மீதி 878 மில்லியனாக அதிகரிப்பு

0

திஸ்ஸமகாராம சந்தகிரி உபய ரஜமகா விகாராதிபதி மாத்தற கந்தபடபத்துவ உள்ளிட்ட ஹம்பாந்தோட்டை தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன தேரர் 1.5மில்லியன் ரூபாய் நிதியை நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்பளிப்பு செய்துள்ளார்.

இலங்கை விமான சேவையின் நிறைவேற்று சங்கம் ஒரு மில்லியன் ரூபாவையும் Generation Next Communication Lanka (Pvt) Ltd நிறுவனம் 02 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ததுடன் அதற்கான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பன்னிபிடிய தர்மபால கல்லூரியின் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய், இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் 02மில்லியன் ரூபாய் ஜனாதிபதியிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களும் கலந்துகொண்டார். ETI கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கே.டீ. விக்ரமசிங்க 81000 ரூபாவினை அன்பளிப்பு செய்தார்.

நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 878 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.