கொவிட்- 19 தொற்றினால் ஏற்படும் மரணங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா முக்கிய கோரிக்கை

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின்போது ஒவ்வொரு சமூகங்களினதும் மரணங்கள் தொடர்பான மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம், தனது ருவிட்டர் தளத்தினூடாக இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

குறித்த ருவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் மக்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு மத நம்பிக்கைகளுக்கு இணங்க விடை கொடுக்கும் உரிமை அவர்களுக்கு இதனூடாக கிடைக்கும்.

ஆகவே ஒவ்வொரு சமூகங்களினதும் மரணங்கள் தொடர்பான மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் ருவிட்டர் பதிவில் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.