கோட்டாபயவின் ஆட்சிக்குப் பின்னரே முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை- பஷீர்

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் ஆட்சியமைந்ததன் பின்னரே முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லையென ஐக்கிய சமாதா கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பஷீர் சேகுதாவூத் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் அதிகளவில் இடம்பெற்றன.

அதாவது நல்லாட்சியில் மிக கோரமான சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டன.  மேலும் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒரு வீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்ததன் பின்னர் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை.

ஆகவே தமிழ்- முஸ்லிம் மக்கள் கூட்டுப்பொறுப்புடன் இணைந்து செயற்படவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.