கோனாபினுவல பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

0

காலி ஹபரதுவாவில் வசிக்கும் 35 வயதான நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் பின்னர் IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபரராதுவ சுகாதார அதிகாரி அலுவலகம்தெரிவித்துள்ளதாக நெத்நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


கந்தகாடு போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையத்தின் ஆலோசகர் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்லட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவரின் தாயும் மனைவியும் வீட்டில் வசித்து வருவதாகவும், அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹபராதுவ மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசகர் வசிக்கும் வீட்டை ஒட்டியுள்ள பல வீடுகளில் வசிக்கும் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரி கூறினார்.


வைரஸால் பாதிக்கப்பட்டவரின் மனைவி ஆசிரியர் என்றும் அவர் கோனாபினுவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு கடமைக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் இரண்டு நாட்கள் பாடசாலைக்குச் சென்று கடமையில் இருந்ததாகவும், அவரது பி.சி.ஆர் சோதனை அறிக்கைகள் வரும் வரை அவரது பாடசாலையின் ஏனைய 25 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.