கோவிட்டிலிருந்து நாட்டை மீட்கும் வாய்ப்பு குறைந்து செல்வதாக எச்சரிக்கை

0

நாட்டின் மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் சுகாதார கட்டுப்பாடு சுகாதாரத் துறையில் இருந்து கை நழுவி செல்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்தால், நாட்டின் வைத்தியசாலை சட்டமைப்பினுள் உள்ள திறன் உச்சத்தை எட்டும் எனவும் வளங்கள் குறைவாக உள்ளமையினால் சுகாதார கட்டுப்பாடு, சுகாதாரத் துறையில் இருந்து கை நழுவி சென்று விடும் என சுகாதார பரிசோதகர் உப்புல் ரோகன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 27ஆம் திகதி முதல் இலங்கையில் தினசரி அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 100க்கு 70 வீதம் அதன் அதிகரிப்பை காண முடிந்ததாக அவர் குறிப்பிடப்படுள்ளார்.

எனவே நிலவும் நிலைமையை தவிர்ப்பதற்காக உரிய சுகாதார வழிக்காட்டல்களை பின்பன்றி சுகாதார பிரிவிற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.