கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட இருவர் உயிரிழப்பு

0

கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட இருவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு மரணங்களுக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றலுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

57 வயதான நபர் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொண்டு இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் மரணித்துள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி ஏற்றப்பட்ட மற்றுமொருவரும் இவ்வாறு மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.