க.பொ.த. உயர்தர பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி

0

எதிர்வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிப்பானை (Calculator) பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய கணக்கியல், பொறியியல், உயிரியல், தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை பயன்படுத்தலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் சாதாரண வகை கணிப்பான்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.