கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவுகள் பெறப்பட்டு, அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.