க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

0

இலங்கையில் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமைகள் காணப்பட்டாலும் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.