க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் ஆக தரவிறக்கம் செய்து, அச்சுப்பிரதி எடுத்து, விண்ணப்பதாரியினதும், கிராம சேவகரினதும் கையொப்பம் இட்டு, பரீட்சைத் திணைக்களத்திற்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

பாடசாலைகளில் இருந்து விடுகைப் பத்திரம் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிக்க தகைமை கொண்டுள்ளனர்.

பாடசாலையில் கற்றுக் கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.