க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவிருந்த நிலையிலேயே இக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கமையவும் விண்ணப்பிக்குமாறு அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.