க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி, கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்கள் நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நோக்கிலேயே இவை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.