க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்!

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேடமாக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரத்தில் 622,352 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.