நாட்டிலுள்ள சகல பிரஜைகளையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை?

0

இன்று முதல் சகல பிரஜைகளையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்துவதற்கான தீர்மானங்கள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர், சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலேயே, இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு தரப்பினர், இது தொடர்பில் சமூக வளைத்தளங்கள் மற்றும் ஏனைய முறைகளில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, குறித்த கோரிக்கைகளை ஆதரித்து அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர், சமூக வலைத்தளங்களில் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.