சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்

0

சங்குப்பிட்டி பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25), கிளிநொச்சி உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24) ஆகியோரே காயமடைந்துள்ளனர். இதில் பிரியதர்சன் கடுமையான காயங்களிற்குள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில்  காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.