கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எட்டு படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வைத்தியசாலையின் செய்தி தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,
வைத்தியசாலையில் கோவிட் தொற்று நோயாளிகளை இனி அனுமதிக்க முடியாது. புத்தாண்டுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பது அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, முல்லேரியா வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியார் பிரியந்த கருணாரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் முக்கிய ஆண்கள் விடுதி ஆகியவை கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.