‘சட்டமா அதிபர் அரசியல் வாதிகளின் கையாள்போல் செயற்படக்கூடாது’

0

சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க கடத்தல் பாணியில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வன்மையாக் கண்டித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

” நபரொருவரை பொலிஸார் கைது செய்வதாக இருந்தால் அதற்கான நடைமுறைகள் உள்ளன. ஷெயான் விடயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அவர் வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்தப்பட்டதுபோலவே தெரிகின்றது.

இது தொடர்பில் அவர் நேரலையை பதிவு செய்திருக்காவிட்டால் இந்நேரம் எங்கிருப்பார் என தெரியாது.

அத்துடன், சட்டமா அதிபர் என்பவர் அரசியல் வாதிகளின் கையாயாக செயற்படக்கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரால் அமுல்படுத்த முடியாமல் உள்ளது.

ஆனால் நீதிக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனை அனுமதிக்க முடியாது.” – என்றார் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.