சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அவதானம்!

0

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அதிகாரிகளிடம் சட்டமா அதிபர் அனுமதி கோரியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்த்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படாமை காரணமாகவே இவ்வாறு சட்டமா அதிபரினால் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தில் பணிபுரிந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உணவு பெற்றுக்கொண்ட வீடொன்றில் வசித்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக குறித்த திணைக்களத்தினை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.