சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கண்டவளை மக்கள் கோரிக்கை

0

கிளிநொச்சி- கண்டவளையில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கண்டவளை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டாவளை- கனகராயன் ஆற்றுப்படுக்கையிலுள்ள அரச காணியின் மேட்டுநில பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வு  இடம்பெற்று வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வினால் தமது பிரதேசம் உவர் நீர் அபாய பிரதேசமாக மாறுவதற்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென  பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.