ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் கடந்த 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் அவ்வாறான 100 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த காலப்பகுதியில் 6 மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் 10 மில்லியன் ரூபாய் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்படுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.