சதொசவுடன் தொடர்புகொள்ள துரித தொலைபேசி இலக்கம்

0

கொழும்பு நகரின் 13 இடங்களில் இன்று (31) முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

13 ட்ரக் வண்டிகளூடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசேடமாக மாடிக்குடியிருப்பு தொகுதிகளை அண்மித்து வாழும் மக்கள், இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் கூறினார்.

இதனிடையே, இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, நாளை (01) முதல் சதொசவுடன் தொடர்புகொண்டு அத்தியாவசிய பொருட்கொள்வனவை மேற்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.